“பார்க்கவே பயமா இருக்கு!” என்று கல்யாணத்திற்கு வந்த விருந்தினர்களை ஒட்டுமொத்தமாக அலறித் துடிக்க வைக்கும் வகையில், தங்களது திருமண வரவேற்பு விழாவிற்குள் நுழைவதற்காக மணமக்களே தங்களது ஆடைகளில் நேரடியாகத் தீயைப் பற்றவைத்துக்கொண்டு ஓடிவந்துள்ள விசித்திரமான மற்றும் ஆபத்தான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் மீண்டும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த வீடியோ, தற்பொழுது சோஷியல் மீடியா ரீல்ஸ் மற்றும் எக்ஸ் தளங்களில் மீண்டும் வைரலாகித் ட்ரெண்டாகி வருகிறது. மணமகனும் மணமகளும் எரியும் உடைகளுடனேயே புன்னகைத்த படி கைகோர்த்துக் கொண்டு விருந்தினர்களை நோக்கி ஓடிவந்துள்ளனர்.

அரங்கம் முழுவதும் ஒரு நிமிடம் மூச்சடைத்துப் போன நிலையில், குறிப்பிட்ட தூரம் ஓடிவந்த அந்தத் தம்பதியினர், உடனடியாக ஒரு இடத்தில் நின்று தங்களது உடல்களில் இருந்த தீச்சுவாலைகளை அணைத்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by OPEN INDIA🇮🇳 (@open_india_)

“>

தங்களது திருமண நாளை வாழ்நாளில் மறக்க முடியாததாக மாற்ற நினைத்து அவர்கள் செய்த இந்த ஆபத்தான ஸ்டண்ட் காட்சி, தற்போதைய 2026-ஆம் ஆண்டிலும் சோஷியல் மீடியாக்களில் மீண்டும் வலம் வந்து நெட்டிசன்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்துவருகின்றன.