பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள மிக ஆபத்தான தங்கச் சுரங்கத் தொழில் பற்றியது இந்தச் செய்தி. அங்குள்ள ஏழை தொழிலாளர்கள் எந்தவொரு நவீன இயந்திரங்களோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ இன்றி, வெறும் வாயில் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய் மற்றும் பழைய கம்ப்ரெஸர் உதவியுடன், கடல் அல்லது ஆற்று நீருக்கு அடியில் பல மணி நேரம் மூழ்கித் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் “கம்ப்ரெஸர் மைனிங்” என்று அழைக்கப்படும் இந்த முறையில், தொழிலாளர்கள் தண்ணீருக்கு அடியில் உள்ள சேற்றைத் தோண்டி தங்கத்தைத் தேடுகின்றனர். பிலிப்பைன்ஸ் அரசு கடந்த 2012ஆம் ஆண்டிலேயே இந்த ஆபத்தான சுரங்க முறைக்குத் தடை விதித்திருந்தாலும், முறையான வாழ்வாதாரம் இல்லாத தொலைதூரக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ளூர் வியாபாரிகளின் நிதியுதவியுடன் இந்தச் சுரண்டல் இன்றும் ரகசியமாகத் தொடர்ந்து வருகிறது.
ये है दुनिया की सबसे खतरनाक खदान, पाताल से निकलता है सोना, धरती का सीना फाड़ निकालते हैं खजाना! https://t.co/JZjhAE7ktn
“>
இதனில் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாகவே, உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் தொழிலாளர்கள் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கின்றனர். நாள் முழுவதும் தண்ணீருக்குள் கடுமையாக உழைத்தால் சில கிராம் தங்கம் மட்டுமே இவர்களுக்குக் கிடைக்கிறது, இது அவர்களின் குடும்பத்தின் சில நாட்களின் பசியை மட்டுமே போக்குகிறது.
ஆனால், முறையான ஆக்ஸிஜன் வசதி இல்லாததால் இந்தத் தொழில் இவர்களின் ஆரோக்கியத்தை முற்றிலுமாக சீரழித்து விடுகிறது. சமீபத்தில் இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆபத்தான நடைமுறையை முற்றிலும் தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை அரசு வழங்க வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
