வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69′ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மம்தா பைஜி, நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் இப்படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதோடு                    எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் திசை அமைக்கின்றார். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகயுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம் கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

இதில் அனிமல் மற்றும் கங்குவா படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தளபதி 69 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற வருகின்றது. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதை கருத்தில் உருவாகி வருவதாகவும், இந்த படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் இப்படத்திற்கு பட குழுவினர் ‘நாளைய தீர்ப்பு’ என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.