நடிகர் விஜய்யின் தி கோட், வெற்றிமாறனின் விடுதலை 2 மற்றும் மோகன்லால் பரோஸ் உட்பட கடந்த ஆண்டு பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் நடிகை கோமல் சர்மா பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இது போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று நடிகை கோமல் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் நடிக்க என்னை கேட்டபோது உடனே ஓகே என்று சொன்னேன். மஞ்சு வாரியருடன் ஒரு படம் பண்ணி இருக்கிறேன். விஜய் சேதுபதி சாருடன் முதல் முறையாக பணியாற்றி இருந்தேன். வெங்கட் பிரபுவின் தி கோட், மோகன் லாலுடன் பரோஸ் ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறினார்..