தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். சித்தா படத்தை இயக்கிய சு அருண்குமார் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். வீர தீர சூரன் படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேம் சேஞ்சர் மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்களினால் இந்த படம் வெளியாகவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படம் மார்ச் மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது விக்ரம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.