நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கோலிவுட்டில் விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர்கள் அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த அவ்வப்போது அவர்களோடு சந்திப்புகளை மேற்கொள்ள முயற்சிப்பர். இருப்பினும் இவர்களில் விஜய் சேதுபதி இன்னும் ஸ்பெஷல் என்றே கூறலாம்.

தன் ரசிகர்களை மதிப்பதிலும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்வதிலும், மிக எளிமையாக பேசுவதிலும் அவரை மிஞ்ச அவரால் மட்டுமே முடியும். அதற்கு பல சான்றுகள் உண்டு. அவற்றை நாம் இணையதளத்தில் பலமுறை கண்டதுமுண்டு.  அந்த வகையில் மீண்டும் புதிய வீடியோ ஒன்று தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது.

அதில், இளைஞர் ஒருவர் தனது ஊர் பகுதியில் சினிமாக்காரர்களுக்கான கேரவன் நின்று கொண்டிருந்ததையும், அங்கு ஏராளமான நபர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பதையும்  கவனித்து என்னவென்று விசாரிக்க, அனைவரும் விஜய் சேதுபதியுடன் செல்பி எடுக்க நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையறிந்ததும் அவரும்  அதே வரிசையில் செல்ல தனது கேரவனுக்குள்ளேயே ரசிகர்களை அனுமதித்து அவர்களது மொபைலையே வாங்கி செல்பி எடுத்து மிக கனிவுடனும், மதிக்கத்தக்க முறையிலும் அவர்களை சந்தோஷப்படுத்தி வழி அனுப்பி வைக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வீடியோ தற்போது வைரலாகன் விஜய் சேதுபதி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.