மாமன்னன் படத்திற்கான ஆரம்ப புள்ளியை இயக்குனர் மாறி செல்வராஜ் 2016லியே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக மாரி செல்வராஜ் திரைப்படம் என்றாலே நம் மனதை கணமாக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அத்தகைய காட்சிகள் ஒரு வார காலத்திற்காவது நம் மனதை வருடியபடி நம் சிந்தனைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அது கண்டிப்பாக கற்பனையான  காட்சி போல் தோன்றாது.

இயல்பாக ஒரு மனிதனுக்கு இப்படியெல்லாம் அவலம் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பதையும்,  அவர்கள் படக்கூடிய வலிகளையும் படத்தின் வாயிலாக நமக்கு புரியும்படி காட்சிப்படுத்தியிருப்பார். அதில், குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதாநாயகன் மீது சிறுநீர் கழிக்கும் காட்சி, கர்ணன் திரைப்படத்தில் வயதானவர்களை அடித்து துன்புறுத்தும் காட்சி, மாமன்னனின் கிணற்றில்  சிறுவர்கள் குளிக்கும் காட்சி என சொல்லிக் கொண்டே போகலாம்.

இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படம் என் அப்பாவிற்கான படம் என ஆடியோ வெளியிட்டில் பேசியிருப்பார். இப்படி வலுவாக அவர் பேசியதற்கு காரணம், அவர் படத்தில் வரக்கூடிய காட்சிகளைப் போலவே துன்ப  சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் இடம்பெற்றுள்ளன. அதில், ஒன்றாக தனது தந்தையை தன்னைவிட வயது குறைவாக உள்ள நபர்கள் பெயர் சொல்லி அழைக்கும் போது வரக்கூடிய வருத்தம், மன உளைச்சல், அதனால் ஏற்படக்கூடிய அதீத கோபம் ஆகியவற்றை அவரது கவிதை வாயிலாக 2016ல் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மாமன்னன் திரைப்படம் அவரது தந்தைக்கான படம் என அவர் மேடையில் கூறியது சரிதான். தனது தந்தைக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதை கொண்டே மாமன்னனின்  கதை அமைந்துள்ளது. அப்படி இருக்கையில் அவரது முகநூல் பதிவே மாமன்னன் கதைக்கான  ஆரம்ப புள்ளியாக திகழ்கிறது. செகண்ட் ஷோ என்னும் சினிமா சார்ந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாறி செல்வராஜின் இந்தக்கவிதை  பதிவிடப்பட்டு நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Second Show (@secondshowtamil)