8 வருடங்களுக்கு முன்னும்,பின்னும் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசிய வீடியோ காட்சிகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

எட்டு வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி நீலகண்டன்,  இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் நேர்காணல் ஒன்றை நிகழ்த்தி இருப்பார். அதில் நான் சில பிரபலங்களின் பெயர்களை பட்டியலிடுகிறேன் அவர்கள் பெயர் சொன்னதும் உங்களுக்கு என்ன நினைவில் வருகிறது என்பதை கூறுங்கள் என தொகுப்பாளர் பெயர்களை சொல்ல ஆரம்பிப்பார்.

அப்போது  ரஜினி, கமல், தனுஷ் என ஒவ்வொன்றாக சொல்லும் போது ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பதிலை மிஷ்கின்  வைத்திருப்பார். சிவகார்த்திகேயன், திரிஷா இவர்களுடைய பெயரை சொல்லும் போது தெரியாது என பட்டென்று சொல்லி முடித்து விடுவார். இதைத்தொடர்ந்து தற்போது மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த மிஷ்கின்,

சிவகார்த்திகேயன் இரவும் பகலும் உழைக்கக்கூடிய கடுமையான உழைப்பாளி மிகவும் பொறுமையானவர், இயக்குனரிடம் மிகச் சிறந்த அணுகுமுறையில் நடந்துகொள்ளக்கூடிய  மிகச்சிறந்த மனிதன் என புகழ்ந்து பேசி இருப்பார். தற்போது நெட்டிசன்கள் இரண்டு வீடியோக்களையும் ஒப்பீடு  செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். மேலும் எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த நேர்காணல் வீடியோ யூடியூபில் உள்ள நிலையில், அதற்கு கீழ் சென்றும் சிவகார்த்திகேயனுக்கு  ஆதரவான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by B A L A J I EFX 🌙 (@bala.jieditz)