
பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகான் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சயித் அலிகானை குடும்பத்தினர் மீது அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது உடலில் 6 இடங்களில் ஏற்பட்ட கத்தி குத்து காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளார். இந்த விவாகரத்தில் தச்சு தொழிலாளி ஒருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்த நிலையில் குற்றவாளியை பிடிக்க 30 தனி படைகள் காவல்துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தானேவில் பதுங்கியிருந்த முகமது என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது உண்மையான பெயர் விஜய் தாஸ் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் பெயர் முகமது ஷரீஃபுல் இஸ்லாம் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதில் சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். மேலும் கொள்ளை அடிப்பதற்காக வீட்டில் நுழைந்ததாகவும் தான் ஒரு நடிகரின் வீட்டில் நுழைகிறோம் என்றும் அவருக்கு தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது நடிகர் சயித் அலிகான் குடியிருக்கும் கட்டிடத்திலிருந்த பாதுகாவலர்கள் இருவரும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ஷரிபுல் சுற்றுச்சூழற்றை தாண்டி உள்ளே குதித்துள்ளார். மேலும் சத்தம் வராமல் இருக்க தனது காலணிகளை கழற்றி பையில் வைத்துள்ளார். அதோடு மொபைல் ஃபோனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இந்நிலையில் கட்டிடத்தின் நடை பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படாததால் அவர் கொள்ளை முயற்சியில் நுழைந்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த பணியாளர்கள் அவரைப் பார்த்து சத்தம் போட்டனர்.
இதனைக் கேட்டு அங்கு வந்த சயித் அலிகான் கொள்ளையனை தடுக்க முயன்ற பொது கொள்ளையன் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பைக்கு வந்த போது தன் பெயரிலேயே ஆதார் அட்டை பெற பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை இந்நிலையில் மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதிகளில் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரரான அமித் பாண்டே என்பவரின் உதவியோடு ஷரிபுல் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார். இதில் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவர் தனது தாய் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார். அவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் தான் திருடுவதற்காக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். மேலும் ஒரு பணக்கார வீட்டில் கொள்ளை அடித்து விட்டு வங்காளதேசம் தப்பி செல்லவும் திட்டமிட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.. L இந்நிலையில் சயிப் அலிகான் வீடு என்று தெரியாமல் தான் அவர் அங்கு நுழைந்தார் என்றும் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் சென்றபோது தான் சயிப் அலிக்கானை கத்தியால் குத்தியுள்ளார் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் தானேயில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு உணவகத்தில் ரூபாய் 13,000 சம்பளத்திற்கு அவர் பணிபுரிந்துள்ளார். அதில் 12 ஆயிரத்தை தாயின் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவர் திருடியதால் வேலையை இழந்தார். மேலும் தானேயில் ஒரு வீட்டு பராமரிப்பு வேலை செய்து வந்த அவர் கடந்த 15ஆம் தேதி அவரது ஒப்பந்தம் முடிந்ததால் அந்த வேலையும் இல்லை. கிட்டத்தட்ட அவர் கையில் பணம் இல்லாமல் இருந்துள்ளார் என ஷரிபுல் வாக்கும் மூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.