
ஐதராபாத் ஐகோர்ட் அருகே முகமது பரூக் என்பவர் அலெக்சாண்டரின் வகை கிளிகளை இருசக்கர வாகனத்தில் ஒரு பெட்டியில் வைத்து கொண்டு சென்றார். அப்போது அதிரடிப்படை அதிகாரிகள் அதனை பார்த்தனர். இதையடுத்து அதிகாரிகள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது 110 அலெக்சாண்ட்ரின் வகை கிளிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் அந்த கிளிகளை அங்குள்ள பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். முகமது பரூக் என்பவர் கிளிகளை வாங்கி வேறொரு இடங்களில் விற்பனையில் ஈடுபட்டது வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் ஒரு ஜோடி கிளி ரூபாய் 1000-க்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவ்வாறு கிளிகளை கடத்தினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறதண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
Rare #Alexandrine #parrots being smuggled for sale were seized by Forest Department officials in #Hyderabad.
The South Zone Task Force Police, while on duty near the #Telangana High Court, intercepted a two-wheeler and discovered 110 Alexandrine parrots being… pic.twitter.com/pmO52M2ano
— NewsMeter (@NewsMeter_In) January 21, 2025