சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கியதோடு வங்கி கணக்குகளையும் முடக்கினர். ஐரோப்பிய ஒன்றியமானது, இவ்வாறு முடக்கப்பட்ட ரஷ்யாவின் பணத்தை உக்ரைன் நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியது.
மேலும், உக்ரைன், ரஷ்ய நாட்டிற்குரிய சுவிஸ் வங்கிகளில் உள்ள 8 பில்லியன் டாலர்களை தங்களுக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்தது. கிரெம்ளின் வட்டாரத்துடன் தொடர்புடைய வர்த்தகர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் அது. எனினும், சுவிட்சர்லாந்து அரசு, தாங்கள் முடக்கிய ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைன் நாட்டிற்கு தர முடியாது என்று தெரிவித்து விட்டது.
உக்ரைன் நாட்டில் உண்டான பாதிப்பிற்கு அதை ஏற்படுத்தியவர்கள் தான் பொறுப்பு. எனினும், தங்கள் நாட்டை பொறுத்தவரை சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். இல்லையெனில், நம்பகத்தன்மையை நாங்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்று சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சராக இருக்கும் Ignazio Cassis தெரிவித்திருக்கிறார்.