மக்களவைத் தேர்தலுக்காக இரண்டாம் கட்ட வேட்பாளரை அறிவிக்க அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, திருச்சியில் 40 நாடாளுமன்ற வேட்பாளர்கள்….  எங்க கட்சியில்  அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்…. கூட்டணி கட்சி சார்பாக விரைவில் அறிவிக்கப்படுகின்ற  வேட்பாளர்கள்….

அதேபோல இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற,  சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்ற சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் திருச்சியில் நடைபெறுகின்ற அந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தின் மேடையிலே அவர்களை அறிமுகம் செய்வோம்.

அந்தந்த நாடாளுமன்ற வேட்பாளர்களிடம் சொல்லி உள்ளோம்.  அவர்கள்  இப்பதான் அறிவித்திருக்கிறோம். நிறைய டாக்குமெண்ட் எல்லாம் இருக்கு இல்ல. அதெல்லாம் வாங்கி எடுத்து,  பரிசீலித்து,  எப்படி இருந்தாலும் 27ஆம் தேதிகுள்ள  நாமினேஷன் செய்தாகணும். அதுக்குள்ளே  எங்களுடைய இயக்க வேட்பாளர் நாமினேஷன் செய்வாங்க என தெரிவித்தார்.