கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் லட்சுமண ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமண ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லட்சுமணராஜ் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் லட்சுமணன் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.