சேலம் மாவட்டத்தில் உள்ள வேடுகாத்தான்பட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் நேற்று முன்தினம் செல்வி 30-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து மயங்கி விழுந்த செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.