கரூர் மாவட்டத்திலுள்ள மாயனூர் கதவணை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கார் டிரைவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் ரமேஷை கைது செய்தனர். மேலும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 183 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.