கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலையாண்டஅள்ளி விநாயகபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அண்ணாமலை பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் வயிற்று வலி சரியாகவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணாமலைக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் அண்ணாமலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அண்ணாமலையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.