கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 60 காட்டு யானைகள் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. நேற்று ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து மேலும் 20 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு வந்தது. இதனால் 80 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த கிராம மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்கு யானைகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இரவு நேரத்தில் கிராம மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.