கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவலப்பள்ளி செல்லும் சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே பெயிண்ட் பேரல்கள் மற்றும் தின்னர் திரவம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெயிண்ட் பேரல்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.