செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன், நீட் தேர்வு பிரச்சினையில் தமிழகத்தில் உடைய மாணவர்கள் ஏழை –  எளிய மாணவர்களாக இருந்தாலும் சரி, கிராமப்புற மாணவர்களாக இருந்தாலும் சரி, வசதி படைத்த மாணவர்களாக இருந்தாலும் சரி, படிப்படியாக நீட் தேர்விலே அவர்கள் தங்களுடைய அறிவாற்றலால்,  கடின உழைப்பால்,  உயர்ந்து…

மற்ற மாநிலங்களுக்கு இணையாக  இருக்கின்ற மாணவர்களுக்கு சவாலாக தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு  ஏற்றவாறு நீட் தேர்வினுடைய பிரசன்டேஜ் உயர்ந்து கொண்டே போகிறது. மாணவர்கள் மத்தியிலே அவர்களுடைய படிப்பு திறமையை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலிலே மீண்டும் கல்வியிலே அரசியலை திமுக புகுத்த நினைக்கின்றது. தேவையற்ற முறையிலே…. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற காலத்திலே… பெற்றோர்களையும், மாணவர்களையும் மீண்டும் நீட் தேர்வு என்ற பெயரிலே கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பது மாணவர்களுடைய படிப்பிலே இடையூறு ஏற்படுகின்ற ஒரு சமாச்சாரமாக இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக பள்ளிகளுக்கு நேரே  சென்று.. மாணவர்களுடைய படிப்பை அவர்கள் முழுமையாக படிக்கும் பொழுது…. அதற்கு இடையூறாக இருக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் எல்லாம் நடத்துவது உண்மையிலேயே தேவையற்ற ஒன்று. மாணவர்களும், பெற்றோர்களும் குழப்ப நிலையில் இருக்கிறார்கள்.

திமுகவுக்கு உண்மையிலேயே நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தால் ? சட்ட ரீதியாக அவர்கள் வெல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். இதை அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்டு… மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்புவது ஒருபோதும் சரியல்ல.குறிப்பாக கல்வி என்பது இந்தியாவினுடைய வருங்காலம். அதனை அரசியலாக்க கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது.