அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹீதர் பிரிஸ்டி (41). இவர் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 5-க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்த மையங்களில் உள்ள முதியவர்களுக்கு அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதோடு ஒரு கட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் முதியவர்கள் என்பதால் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

ஆனால் திடீரென ஹீதர் மீது உடன் பணிபுரிபவர்களுக்கு சந்தேகம் வந்ததால் அவரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சர்க்கரை நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு அளவுக்கு அதிகமான இன்சுலின் கொடுத்து அவர்களை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த குற்றங்களை அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் தன்னுடைய வழக்கறிஞரிடம் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கும் 3 ஆயுள் தண்டனையும் சுமார் 360 முதல் 760 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.