சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா செல்பவர்களுக்கு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வருகின்ற 7-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளி நபர்களுக்கு இ-பாஸ் கட்டாயம். இந்த இ-பாஸ் பதிவு செய்வதற்கான இணையதளம் இன்று மாலை தொடங்கும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கப்படுவதோடு ஒரு வாகனத்திற்கு ஒரு பாஸ் மட்டுமே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு பேருந்தில் நீலகிரிக்கு வருபவர்களுக்கு இ_பாஸ் தேவை இல்லை. மேலும் இந்த இபாஸ் மே 7ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.