
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசினுடைய நீண்ட நாள் கோரிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று.. ஆந்திராவும் தொடங்கி விட்டார்கள், தெலுங்கானாவில் விரைவில் அறிவிப்போம் என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பிஹாரில் முடித்திருக்கிறார்கள். இதெல்லாம் செய்து முடித்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இன்னும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது கண்டிக்கத்தக்கது, இது வருத்தம் எல்லாம் கிடையாது, இது கண்டிக்கத்தக்கது.
அப்போ நீங்க சமூகநீதி பற்றி பேசாதீங்க… உங்களுக்கு பேசுறதுக்கு தகுதி கிடையாது. திமுக அரசுக்கு சமூக நீதி பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. ஏன்னா இந்தியாவுல இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சாதியின் அடிப்படையில் கணக்கெடுப்பு 1931 தான் கடைசியாக வெள்ளையர்கள் காலத்தில் நடத்தப்பட்டது 1992, 1993 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட கணக்கெடுப்பை வைத்து தான் இன்று வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இடையில் எந்த சமுதாயம் அதனால் வளர்ச்சி பெற்று இருக்கிறது, பயன் பெற்றிருக்கிறது, எந்த சமுதாயம் பயன் பெறவில்லை என்று தெரிந்து கொள்ள முதலமைச்சருக்கு ஆர்வம் இல்லையா ? எப்படி அது ஆர்வம் இல்லாமல் போகும் உங்களுக்கு… இப்போ ஒரு உதாரணம் பீகார்ல ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்துனாங்க.. அந்த அடிப்படையில இட ஒதுக்கீடு அதிகப்படுத்தினாங்க… 60 விழுக்காடுல இருந்து 75 விழுக்காடு அதிகப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் அங்கு முக்கியமான ஒரு புள்ளி விவரத்தை கண்டறிந்தார்கள்…
பீகாரில் 94 லட்சம் குடும்பங்கள் மாத வருமானம் 6 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்கிறது என்று அந்த தகவலை கண்டறிந்தார்கள்… இந்த கணக்கெடுப்புல, சர்வேயில்ல…. இது காஸ்ட் சென்சஸ் நாங்க கேட்கல, சர்வே தான் நாங்கள் கேட்கிறோம்… அப்போ அந்த 94 லட்சம் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் யாராவது ஒருத்தருக்கு தொழில் தொடங்குவதற்கு…
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒதுக்கி இருக்கின்றார்கள். அப்போ இதுதான் உண்மையான சமூக நீதி… இதுதான் உண்மையான வளர்ச்சியா நாங்க பார்க்கிறோம்…. இத செய்யணும், இத தெரிஞ்சுக்கறதுக்கு உங்களுக்கு மனசு வரல. எல்லாமே கோரிக்கை வைத்திருக்கிறார்கள்… எந்த சமுதாயமோ, யாருமோ இதை எதிர்கல… அத அப்ப ஏன் உங்களுக்கு இன்னும் மனசு வரல… மனசு தான் வரல, சட்டம் இருக்கு..
இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் ஆக்ட் 2008 படி பாத்தீங்கன்னா… பஞ்சாயத்து தலைவருக்கு கூட சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் இருக்கிறது. பஞ்சாயத்து தலைவருக்கு இருக்கு… அப்போ அந்த சட்டத்தின்படி முதலமைச்சர் க்கு இல்லையா ? என்ன ? அந்த சட்டத்தின்படி தான் பீகாரில் எடுத்துருக்காங்க… ஆந்திரால எடுத்துட்டு இருக்காங்க. அதனால தமிழக அரசு உடனடியாக அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.