அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராமர் கோவில் பத்தி அரசியல்  யார் பண்ணுறா ?  யாரு கேக்குறான்னு தெரியலையே…. கேள்வி கேட்பவர் யார் என்று தெரிந்தால் உங்களைப் பார்த்து பதில் சொல்லலாம்.  இரட்டை இலை காமிக்கறீங்க….   ராமர் கோவிலை பற்றி யார் அரசியல் செய்கிறார்.

பிஜேபி அரசியல் பண்றாங்களா? கோவில் கட்றாங்களா ? கோவில் கட்டியிருக்காங்க…  அது அரசியல் பண்றாங்களான்னு தேர்தல் வரும்போது தெரியும். இடைக்கால பட்ஜெட்டை வரவேற்று இருக்கிறேன். நான் வரவேற்றதற்கு காரணம் இருக்குது பாஸ்…  இது  இடைக்கால பட்ஜெட் தானே,  இதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு பார்ப்போம்?

ஏன்னா இன்கம் டேக்ஸ் சலுகைகள் இல்லன்னு சொல்றாங்க….  ஒரு முற்போக்கு சிந்தனையா ? பண்றாங்கன்னு நான் நினைக்கிறேன்.  ஏன்னா வருங்காலத்தில் எப்படி இருக்கணும் ? பொருளாதார நிலை 14 லட்சம்  ஆல்ரெடி டெபிசிட்ல இருக்குன்னு சொல்றாங்க….  அதை எப்படி நிவர்த்தி பண்ண வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்படுகிறார்கள் என்று என்னுடைய கருத்து….  மற்றவர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கு என்றால் கருத்து சொல்வார்கள்.  ஆனா என்னுடைய கருத்து இதுதான் என பேசினார்.