தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை கேள்விக்குறியாக்கும் வகையில், நடைபெற்று வரும் ‘சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்’ மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்குக் எதிராகக் கட்சியின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக, மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை காலை 11 மணி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற உள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், த.வெ.க-வின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்குரிமை சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராகக் கட்சியின் இந்த திடீர் ஆர்ப்பாட்ட அறிவிப்பு அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
