உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தற்போது நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழாவில், நான்கு வயது சிறுமி ஒருவர் மிகக் கடினமான ‘சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை’ தங்குதடையின்றி பாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் உடுக்கை ஏந்தியபடி, அந்தச் சிறுமி சமஸ்கிருத ஸ்லோகங்களைத் தெளிவான உச்சரிப்புடன் பாடுவது அங்கு திரண்டுள்ள லட்சக்கணக்கான பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
चार साल की बच्ची ने पूरा शिव तांडव सुना, बना दिया रिकॉर्ड।😳
ॐ नमः शिवाय pic.twitter.com/c3iESRaqfl— Annuश्री (@annushreex) January 15, 2026
குழந்தைகள் மழலை பேசும் வயதிலேயே, இவ்வளவு நீண்ட மற்றும் கடினமான ஸ்லோகங்களை மனப்பாடமாகப் பாடும் இந்தச் சிறுமியைப் பார்த்த சமூக வலைதளப் பயனாளர்கள், அவரை ‘சின்னஞ்சிறு சிவ பக்தை’ என்றும் ‘குழந்தை துறவி’ என்றும் போற்றி வருகின்றனர்.
அன்னுஸ்ரீ என்பவரது எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்று வருவதுடன், அந்தச் சிறுமியின் அபாரமான நினைவாற்றல் மற்றும் பக்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
