தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினியாக வலம் வரும் சமந்தா படப்பிடிப்புகளில் பிசியாக நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது, மயோசிடிஸ் எனும் தசையழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவ்வாறு சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

சமந்தா நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் படம் 5 மொழிகளில் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சமந்தா திரையுலகில் நடிக்க துவங்கி இப்போது 13 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.