தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான கடாவர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பயணங்கள் செல்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் இவர் தற்போது இந்தோனேசியாவுக்கு சென்று அங்குள்ள பாலிதீன் காட்டுப்பகுதியில் அறிவியில் நண்பர்களோடு குளித்துள்ளார்.

இது தொடர்பான தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கருப்பு நிற நீச்சல் உடை அணிந்து கொண்டு குளிக்கிறார். பாறைகளின் மீது ஏறி குதிப்பது, விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடுவது போன்ற குறும்புத்தனங்களை செய்துள்ள அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)