விஜய், அஜித் படங்களில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பை நடிகை சாய் பல்லவி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில்   சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கார்கி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவியை அணுகியதாகவும், ஆனால் படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாததால் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படத்திலும் நாயகியாக நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.