தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகியது. வம்சி இயக்கத்தில் வெளியாகிய இப்படத்தை அடுத்து தளபதி விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக கேரளாவில் இப்படத்தை வாங்க கடும் போட்டி நடைபெற்று வருவதாகவும், 16 கோடி ரூபாய் வரை கொடுத்து இந்த படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் முன்வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.