தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரிலீஸ் ஆகி 34 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு கரகாட்டக்காரன் 2 படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறாராம். அதன்பிறகு கவுண்டமணி, செந்தில், கோவை சரளா போன்றோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த நிலையில் தற்போது கரகாட்டக்காரன் 2 படத்திற்கு அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறாராம். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.