மலேசியாவில் சுற்றுலாத் தலம் ஒன்றிற்கு வந்த பயணிகளுக்கு, அங்கிருந்த ஒரு ராட்சத ஓணான் கையை அசைத்து ‘டாட்டா’ காட்டி விடைபெற்ற கியூட்டான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. பொதுவாக ஓணான், பல்லி போன்ற ஊர்வன இன விலங்குகள் மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளியும் அல்லது மிரண்டு போய் பார்க்கும். ஆனால், மலேசியாவில் கேமராவில் சிக்கிய இந்த பெரிய அளவிலான ராட்சத ஓணான், அங்கிருந்த டூரிஸ்ட்களைப் பார்த்து மிகவும் ஃபிரண்ட்லியாக தனது கையை அசைத்து, வழியனுப்புவது போல விசித்திரமான சைகையைச் செய்துள்ளது.

​இதை சற்றும் எதிர்பாராத சுற்றுலாப் பயணிகள், அந்த ஓணானின் புத்திசாலித்தனமான மற்றும் கியூட்டான செய்கையைக் கண்டு ஆச்சரியமடைந்து, அதைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த அரிய மற்றும் அழகான விலங்கின் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இதைப் பார்க்கும் இணையவாசிகள், “நம்ம ஊர் ஓணானை விட இந்த வெளிநாட்டு ராட்சத ஓணானுக்கு விவரம் அதிகமாக இருக்கிறது” என்றும், “விலங்குகளுடனான இத்தகைய மறக்க முடியாத அனுபவங்கள் ஆச்சரியமானவை” என்றும் கமெண்ட்டுகளைப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.