காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் கேரளா திரும்பிய மலையாளத் திரைப்பட உலகின் பிரபல நடிகர் மம்மூட்டியின் வாகனம் நள்ளிரவு நேரத்தில் வழியறியாமல் தவித்தபோது, ஒரு உள்ளூர் இளைஞர் கைப்பேசி எண் வாங்கியும், புகைப்படம்காட்டியும் உதவிய சுவாரஸ்யமான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மம்முட்டி கம்பனி தயாரிப்பில், இயக்குநர் நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகும் புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு, மேலாளர் ஜார்ஜ், தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் மற்றும் நடிகர்-சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பிஷாரடி ஆகியோருடன் அதிகாலை 3 மணியளவில் காரைக்குடியில் இருந்து கேரளா நோக்கி மம்மூட்டி காரில் புறப்பட்டார். திருப்பூர் அருகே நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததால், கூகுள் மேப்ஸை நம்பிச் சென்ற குழுவினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சரியான பாதையின்றி அலைக்கழிக்கப்பட்டனர். வழியெங்கும் ஆள் நடமாட்டம் இல்லாததால், காரைக்குடி ஹோட்டலிற்கே திரும்பிச் சென்றுவிடலாமா என்று மம்மூட்டி யோசித்தபோது, பட்டமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் பாண்டியன் என்பவரை எழுப்பி வழி கேட்டுள்ளனர். அவர் கூறிய வழிகளும்கூட ஏற்கெனவே மூடப்பட்ட பாதைகளாகவே இருந்தன.
அப்போது சற்றுத் தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மற்றொருவரான பாண்டியன், காரின் உள்ளே உற்றுப் பார்த்ததும் மம்மூட்டியை அடையாளம் கண்டு வியப்படைந்தார். உடனே தனது பைக்கில் அவர்களை முன்னின்று அழைத்துச் சென்று, கூகுள் மேப்ஸுக்குத் தெரியாத குறுக்கு வழியில் 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து கேரளாவிற்குச் செல்லும் சரியான வழியைக் காட்டி உதவினார்.
It was three in the morning. Mega Star Mammootty, after finishing the shoot of his new film directed by Nidheesh Sakadev under the Mammootty Kampany banner, was rushing back to Kerala from Karaikudi. With him were his manager George, producer Anto Joseph, and friend, actor and… pic.twitter.com/Jy34hVdq2I
— Rajasekar (@sekartweets) August 15, 2026
“>
பாண்டியனின் உதவியால் நெகிழ்ந்துபோன நடிகர் மம்மூட்டி, காரைவிட்டு இறங்கி அவரது பெயர் கேட்டு, தனது கைப்பேசியை ரமேஷ் பிஷாரடியிடம் கொடுத்து பாண்டியனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், “இனி பாண்டியன் எனது நண்பர்” என்று கூறி அவருக்கு அன்பும் நன்றியும் தெரிவித்து விடைபெற்றார்.
