இன்றைய காலகட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் மற்றும் நள்ளிரவு பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக நடக்கும் தொடர் குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்களை மனதில் வைத்து, புதுமணத் தம்பதி ஒன்று தங்களது ஹனிமூன் பயணத்திற்கு பாடிகார்டுடன் வந்துள்ள விசித்திர சம்பவம் சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான, தனிமையான தருணங்களை ரசிக்கச் செல்லும் ஹனிமூன் பயணத்தில், பாதுகாப்புக்காக ஒரு தனியார் செக்யூரிட்டியை கூட்டி வந்த கணவனின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய சமூக சூழலில் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே தான் இந்த முடிவை எடுத்ததாக அந்த கணவன் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விசித்திரமான ஹனிமூன் பயணம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் இது சரியா தவறா என்ற விவாதம் தீயாய் பரவி வருகிறது.
आजकल के माहौल को देखकर BODYGUARD
लेकर Honeymoon मनाने आया पति…
आजकल हो रहीं घटनाओं को देखकर ऐसा ही करना पड़ेगा…
आपको क्या लगता है ऐसा करना सही है या गलत…??? pic.twitter.com/sS2gHsoT5X
— Namita (@Namita62307261) June 27, 2026
ஒரு தரப்பினர், “இன்றைய மோசமான சூழ்நிலைக்கு மனைவியின் பாதுகாப்பை உறுதி செய்ய கணவன் எடுத்த இந்த முடிவு முற்றிலும் சரியானது, பாராட்டுக்குரியது” என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மறுதரப்பினரோ, “ஹனிமூன் என்பது தம்பதிகளின் தனிப்பட்ட சுதந்திரமான இடம், அங்கே ஒரு பாடிகார்டை கூட்டிச் செல்வது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்” என்று விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ, நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து வரும் நிலையில், இந்த கணவனின் அதிரடி பிளான் பலரையும் யோசிக்க வைக்கும் ஒரு புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது.
