கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில், பட்டம் பெற்ற முஸ்லிம் இளம் பெண் ஒருவர் தனது மத நம்பிக்கையின் காரணமாக மேடையில் இருந்த ஆண்களுக்கு கை குலுக்க (Shake Hand) மறுத்த சம்பவம் தற்போதைய சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பொதுவாக இது போன்ற விழாக்களில் சான்றிதழ்களை வழங்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கைகுலுக்கி நன்றி தெரிவிப்பது வழக்கம்.
ஆனால், இந்த மாணவி மேடைக்கு வந்தபோது, அங்கிருந்த ஆண்கள் கை குலுக்க கையை நீட்டியும், அதை ஏற்காமல் தனது நெஞ்சில் கை வைத்து புன்னகையோடு மறுத்துள்ளார். இஸ்லாமிய மத விதிகளின்படி அந்நிய ஆண்களுக்கு கை கொடுப்பது தவறு என்பதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்து வருகிறது. ஒரு தரப்பினர், “படித்த பெண்ணாக இருந்தாலும் தனது மதக் கொள்கைகளிலும், கலாச்சாரத்திலும் உறுதியாக இருக்கும் இந்த மாணவியின் துணிச்சல் பாராட்டுக்குரியது” என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Muslim girl refuses to shake men’s hands after graduating because it’s against her religion.
Do we really want this crap in America..!? pic.twitter.com/zEzKqAtgSV
— American AF 🇺🇸 (@iAnonPatriot) June 27, 2026
அதே நேரத்தில் மற்றொரு தரப்பினரோ, “கல்வி கற்கும் இடத்தில் இதுபோன்ற மதக் கட்டுப்பாடுகளைக் காட்டுவது மேடையில் இருப்பவர்களை அவமதிப்பது போலாகும்” என்று விமர்சித்து வருகின்றனர். நாகரிகம் என்ற பெயரில் தனது மத நம்பிக்கையை அந்தப் பெண் விட்டுக்கொடுக்காத இந்த சம்பவம், தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறியுள்ளது.
