தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என போற்றப்படும் இயக்குனர் கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பின் காரணமாக தன்னுடைய 73 வயதில் மரணம் அடைந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்தத்திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
#Watch | மறைந்த இயக்குநர் பாக்யராஜுக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய நடிகர் தனுஷ்!#SunNews | #RIPBhagyaraj | #Bhagyaraj | #Dhanush pic.twitter.com/StMAoZG1I3
— Sun News (@sunnewstamil) June 27, 2026
23 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அவர் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்ட பாக்கியராஜ் மறைவு ஒட்டுமொத்த திரையுலகுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதினிலே திரைப்படத்தில் பாரதிராஜாவிடம் உதவியக்குனராக பணிபுரிந்த பாக்யராஜ் பின்னர் இயக்குனராக அறிமுகமானார். சமீபத்தில் பாரதிராஜா மரணமடைந்த நிலையில் தற்போது பாக்யராஜின் மரணமும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் வந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகரும் இயக்குனருமான தனுஷ் கதறி அழுதபடியே பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவசரமாக வந்தார். அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவரது மகன் சாந்தனுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். மேலும் அவர் இரங்கல் தெரிவிப்பதற்கு அழுதபடியே வந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
