புதியதாக வாகனங்கள் வாங்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியான வகையில் நம்பர் பிளேட்டுகளை வாங்குவது வாடிக்கையாக மாறி விட்டது. இது போன்ற கவர்ச்சியான எண்கள் விஐபி (அ) விவிஐபி எண்கள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹிமாச்சலபிரதேசம் மாநிலத்தில் 1 ஸ்கூட்டியின் விஐபி நம்பர்பிளேட் ஏலம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஷிம்லா மாவட்டத்திலுள்ள கோட்காய் பகுதியில் HP 999999 எனும் நம்பர் பிளேட் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இதற்கு முதலில் வெறும் 1000 ரூபாய் மட்டும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அப்போது இந்த எண்ணை வாங்குவதற்கு அதே பகுதியை சேர்ந்த 26 பேர் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக இந்த விஐபி எண்ணுக்கான மதிப்பு 1 கோடி ரூபாயை கடந்து உள்ளது. ஏலம் இதுவரையிலும் 1 கோடியே 11 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது. இதற்கான ஏலம் இன்று (பிப்.17) மாலை நடைபெறவுள்ளது. ஸ்கூட்டியின் விலையானது சுமார் 1 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால் அதற்குரிய நம்பர் பிளேட்டுக்கான ஏலம் ஒரு கோடியை தாண்டுகிறது. நம்பர் பிளேட்டுக்கு இவ்வளவு செலவு செய்வதில் என்ன நியாயம் உள்ளது?, இதுபோன்ற மோகங்கள் ஆபத்தானவை என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.