பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பிபிசி அளித்த வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பணப்பரிவர்த்தனைகளை பிபிசி கணக்கில் காட்டாததும் சோதனையில் தெரியவந்தது. பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்றும் சோதனையில் தெரியவந்தது. டிவி, டிஜிட்டல், ரேடியோ என பல வழிகளில் பிபிசி செய்திகள் மூலமாக வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்கள் நடந்துள்ளது. பிபிசி இன் டெல்லி, மும்பை அலுவலகங்களில் 4 நாட்கள் நடைபெற்ற சோதனை முடிவடைந்துள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இந்த நிறுவனம் பல்வேறு மொழிகளில் தனது ஊடக பணிகளை செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஆங்கிலத்தில் மட்டும் அல்லாமல் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் பிபிசி தனது செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. அதாவது டிஜிட்டல் மூலமாக, ரேடியோ மூலமாக, டெலிவிஷன் மூலமாக என பல்வேறு வகைகளில் பல்வேறு மொழிகளில், இந்திய மொழிகளில் செய்திகளை வெளிப்படுத்தி வந்தாலும், அதற்கான வருமானம் என்பது பிபிசி கணக்கில் காட்டப்படவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

அதற்கு எந்த அளவுக்கு ஊடக செயல்பாடு இருக்கிறதோ அந்த அளவுக்கு வருமானம் காட்டப்படவில்லை என்றும், இதை தவிர இந்தியாவில் இருந்து லண்டனுக்கு, அதாவது பிபிசி தலைமை அலுவலகத்திற்கு இந்தியாவை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ள சில பணங்களுக்கான கணக்கு காட்டப்படவில்லை, சில தொகைகள் வெளியே  அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அந்த தொகைகளுக்கு எந்த விதமான கணக்கமும் இல்லை. கணக்கில் காட்டப்படாமல் வெளிய அனுப்பப்பட்டுள்ள பணத்துக்கு என்ன ஆதாரம் போன்ற சோதனைகளை தான் வருமானவரித்துறை நடத்தியுள்ளது.. ஆகவே இது போன்ற விவரங்களை எல்லாம் குறிப்பிட்டு எதற்காக 3 நாள் பிபிசி அலுவலகத்தில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு இடங்களிலும் சோதனை நடந்தது என்பதை வருமானவரித்துறை விளக்கியுள்ளது.

கணக்கிடும் முறையில் பல்வேறு விதமான கணக்கு வழக்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு நாட்டு நிறுவனம் வேறு நாட்டில் போய் அங்கு தனது பணிகளை செய்யும்போது, அது பணத்தை எப்படி கணக்கில் காட்ட வேண்டும் ஒரு நாட்டில் இருந்து, வெளிநாட்டிற்கு பணம் சென்றால் அதற்கு எந்த முறையில் கணக்கு காட்ட வேண்டும் என்றெல்லாம் பல்வேறு விதிகள் இருக்கின்றன.. இதுபோன்ற விதிகள் எல்லாம் சரியான முறையில் பின்பற்றப்பட்டுள்ளதா? இல்லையா என்பதற்கு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது..  அதாவது 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை, அதன்பிறகு 4வது நாள் இன்று வருமானவரித்துறை ஏன் இந்த சோதனை நடத்தப்பட்டது என்ற விளக்கத்தை அளித்துள்ளது.

இதில் பல்வேறு ஊழியர்களுடைய வாக்குமூலம் மற்றும் டிஜிட்டல் எவிடன்ஸ் என்று சொல்லப்படும் ஆதாரங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை பரிசீலனை செய்ததாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது ஆகவே இந்த வருமான வரித்துறை சோதனைகளுக்கு பிறகும் தொடர்ந்து நடவடிக்கைகள் இருக்கும் என்பது இந்த அறிக்கையின் மூலமாக தெளிவாக தெரிகிறது..

இதனிடையே அரசியல் ரீதியான பழிவாங்கல் செயல், பிபிசி குஜராத் வன்முறை தொடர்பான 2வது ஆவணப்படத்தை வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் மீது குற்றம் சுமத்தியதன் காரணமாகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.. அத்தகைய சூழலில் தான் வருமானவரித்துறை தன்னுடைய நடவடிக்கைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த விளக்கத்தை அளித்துள்ளது.