YouTube நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். சென்ற 2014-ம் வருடம் முதல் சூசன் வோஜ்சிக்கி YouTube தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். அதன்படி கடந்த 9 வருடங்களாக YouTube சிஇஓவாக பணிபுரிந்து வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று பதவி விலகினார்.

இதையடுத்து youtube புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 25 ஆண்டுகளாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் இவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முக்கியமான மற்றும் அற்புதமான பணியை தொடர உற்சாகமாக இருப்பதாக மோகன் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.