திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டார் கிட்ஸ் 2023 போட்டி நடைபெற்றது. இதனை டவுன் போத்தீஸ் மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தியது. இந்த போட்டியில் நெல்லை லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியில் தாளாளர் மரிய சூசை, பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.