பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, நாளைக்கு, சோறுக்கு எங்கய்யா போ போறீங்க. நீங்க, சோறுக்கு எங்க போ போறீங்க. தமிழ்நாட்டிலேயே ஏற்கனவே, கடந்த 45 ஆண்டு காலத்திலே, இந்த 45 ஆண்டு காலத்தில், விவசாயமுடைய, விவசாய நிலத்தோட பரப்பளவு 48 விழுக்காட்டிலிருந்து, இப்போ 36 விழுக்காடாக குறைந்து இருக்கிறது. அதாது, சொல்லப்போனால்,

12 விழுக்காடு தமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலம் குறைந்து இருக்கிறது  46 ஆண்டு காலத்தில்… இன்னும் சொல்லப்போனா, 42 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்த நம்ம இழந்துட்டோம். எவ்வளவு காலத்துல, 45 வருஷத்துல. 42 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்த, இழந்திருக்கிறோம். நாளைக்கு நம்ம பிள்ளைங்க, நம்ம பேரப்பிள்ளைங்க, நம்ம சந்ததியினர்கள், சோறுக்கு, எங்க போ போறாங்க.

அந்தக் கூறு கூட உங்களுக்கு எல்லாம் இல்லயா யா? அந்தக் கூறு கூட உங்களுக்கெல்லாம் இல்லையா?  சாப்பாடு எங்க போக போறீங்க? நம்ம சந்ததியினர்கள், என்ன பண்ண போறாங்க. அந்த யோசனை கூட உங்களுக்கு கிடையாதா, அரசாங்கத்துக்கு கிடையாதா?  இருக்கிற நிலத்தை எல்லாம்  ஆக்கிரமிப்பு பண்ணி, அழிச்சு, வேற, நீங்க எங்க போ போறீங்க.

திருவண்ணாமலை மாவட்டத்தில, பக்கத்துல, இங்க இருந்து ஒரு முப்பது, நாற்பது கிலோமீட்டரு, வந்தவாசி போனா, தரிசு நிலம், ஆயிரக்கணக்கான ஏக்கர், தரிசு நிலம் இருக்கு, அரசு நிலம் இருக்கு, அங்க தொழில் பே ட்டியை தொடங்குங்க. கீழ்பண்ணாத்தூர் பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் அங்க தரிசு நிலம், அரசு நிலம் இருக்கு, அங்க தொடங்குங்க. போளூர் பக்கத்துல இருக்கு. செங்கம் பக்கத்துல இருக்குது.

இந்த மாவட்டத்துல ஆயிரக்கணக்கான ஏக்கர், எல்லா அரசு நிலம் இருக்கு அங்க தொழிற்சாலை தொடங்குங்க, வேண்டான்னு நாங்க சொல்லல. ஆனால், இங்க முப்போகம் விளைகின்ற இந்த மண்ணை அழிப்பதற்கு, உங்களுக்கு எப்படி மனசாட்சி இருக்கிறது. எப்படி உங்களுக்கு மனம் இருக்கிறது. முப்போகம் விளைகின்ற, இந்த மண், பொன்னான மண் இது. இதை ஒருபோதும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது என கூறினார்.