நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  சைபர் குற்றத்திற்கு வழிவகுக்கும்,  பயனர்களால் செய்யப்படும் சில பொதுவான மனிதத் தவறுகள் குறித்து SBI கூறுவதாவது,  

அறிமுகம் இல்லாத நபரின் அறிவுரையின் பேரில் மொபைல் ஆப்களை பதிவிறக்கம் செய்வது.

எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் தெரியாத லிங்க்களை கிளிக் செய்வது.

மின்னஞ்சல்களில், தொலைபேசி அழைப்புகளில், எஸ்எம்எஸ், சமூக வலைதளத்தில், கார்டு எண், ரகசிய எண், சிவிவி,  ஓடிபி போன்ற நிதி சார்ந்த  தகவல்களை மற்றவர்களுடன் பகிர்வது.

ஆப் செயல்படுவதற்கு தேவை படாத கேலரி, மெசேஜ்கள், காண்டாக்ட், மேப்ஸ் ஆகியவற்றை அணுகுவதற்கான அனுமதியை மொபைல் பயன்பாடுகளுக்கு புரிதல் இல்லாமல் வழங்குவது(Allow permission). 

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அங்கீகரிக்கப்படாத பொது WIFI நெட்வொர்க்களுடன் நமது சாதனங்களை இணைப்பது.

பலவீனமான அல்லது எளிதில் யூகிக்கக்கூடிய கடவுச்சொற்களை பயன்படுத்துவது மற்றும் அவற்றை அடிக்கடி மாற்றாமல் வைத்திருப்பது.

உள்ளிட்ட மனிதத்தவறுகளால் சைபர் குற்றம் நிகழ்ந்து வருவதாகவும் இதை மக்கள் திருத்திக்கொண்டால், பெரும்பாலான சைபர் குற்றங்கள் தடுக்கப்ப்டும் என SBI தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf