செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,   இந்த நேரத்தில் நான் எதை சவால் என்று நினைக்கிறேன் அப்படின்னா….   தமிழகத்தில் கேப்டன் ஆரம்பித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம்…. எந்த நோக்கத்திற்காக…. எந்த லட்சியத்திற்காக… ஆரம்பிக்கப்பட்டதோ…. அந்த லட்சியத்தை அடைவது ஒன்றே தான் எங்களுடைய இலக்கு…… அதற்கு இன்றைக்கு நிச்சயமாக கேப்டன் அவர்கள் இருந்த காலத்திலேயே….. பல எதிர்ப்புகளை…

பல எதிர் நீச்சல்களை போட்டு தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இந்த 18 ஆண்டு காலமாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம்… அரசியல் என்பது சும்மா கிடையாது…. நிச்சயமாக எல்லாவிதத்திலும் எதிர்ப்புகளும், எல்லா விதத்திலும் எங்களுக்கு தடங்கல்களும் வரும் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கேப்டன் கூட நான் திருமணமான நாளிலிருந்து இன்று வரை பயணிக்கிறேன்…. ரசிகர் மன்றம்….. நற்பணி மன்ற இயக்கம்…. கழகம்..  அப்புறம் ரசிகர் மன்றத்திற்கு கொடி… பின்பு கட்சியாக வந்தது….. எதிர்க்கட்சியானது முதல் இன்றைக்கு வரைக்கும் அத்துணை செயல்களிலும்… கேப்டனுடனும்…. எங்களுடைய மாவட்ட செயலாளர்கள்… கழக நிர்வாகிகள்…. தொண்டர்கள் அவர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லாமல் அன்னையாகவும் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

அதனால் இவர்கள் அத்தனை பேரும் என்னுடன் இருக்கிறார்கள்.  கேப்டன் என்னுடன் இருக்கிறார்.  எங்கள் மாவட்ட கழகச் செயலாளர் இருக்கிறார்… எங்க கழக நிர்வாகிகள்….. தொண்டர்கள்….. பக்க பலமாக எனக்கு இருக்கிறாங்க என்ற ஒரே தைரியத்தோடு….. கேப்டன் சொன்னது போல தெய்வத்தோடும்,  மக்களோடும்…. ஆதரவோடு நிச்சயமாக எந்த சவாலையும் நான் சந்திக்க தயாராக இருக்கின்றேன் என தெரிவித்தார்.