இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்-2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கமல்ஹாசன் திடீரென தனது ரசிகர்கள் சிலரை நேரில் அழைத்து அவர்களுடன் சோசியல் மீடியா பற்றி கலந்துரையாடி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதில், சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக என்னையும், என் திரைப்படங்களையும் கொண்டாடும் ரசிகர்களில் சிலரை சந்தித்தேன். சோஷியல் மீடியா வலிமை மிக்க ஒரு ஊடகமாகும். அதை நல்ல வழிகளில் பயன்படுத்திக்கொள்வது எப்படி என கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டோம்” என குறிப்பிட்டு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் கமல்.