அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில், மலையேற்றம் சென்ற ஒருவரை ஓநாய் ஒன்று சுமார் 10 நிமிடங்கள் பின்தொடர்ந்து சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆபத்தான சூழலிலும் பதற்றமடையாமல் அந்த நபர் காட்டிய நிதானமும், அதிலிருந்து அவர் தப்பிய விதமும் காண்போரைக் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இக்னாசியோ ஸானின் என்பவர், பூங்காவில் உள்ள லாமர் ரிவர் டிரெயில் பாதையில் தனியாக மலையேற்றம் செய்துகொண்டிருந்தார். அப்போது காட்டின் புதர்களுக்கு இடையே இருந்து வந்த இளம் கருப்பு ஓநாய் ஒன்று, அவரைத் தொடர்ந்து பின்தொடரத் தொடங்கியது. இந்த முழுச் சம்பவத்தையும் சற்று தொலைவில் இருந்த மற்றொரு மலையேற்ற வீரர் தனது தொலைநோக்கி மூலம் வீடியோ படம்பிடித்துள்ளார்.

அந்த ஓநாய் மெல்ல மெல்ல ஸானினை நெருங்கி வந்தபோதும், அவர் பீதியடைந்து ஓடாமல் மிகவும் அமைதியாகத் தனது நடையைத் தொடர்ந்தார். ஓநாய் மிக அருகில் வந்தவுடன், தான் வைத்திருந்த கரடி விரட்டி ஸ்பிரேயை (Bear Spray) அதனை நோக்கி அடித்தார். ஸ்பிரே பட்டவுடன் ஓநாய் சிறிது பின்வாங்கிய போதிலும், முழுவதுமாக விலகிச் செல்லாமல் தொடர்ந்து பின்தொடர்ந்தது.

மீண்டும் ஒருமுறை கரடி விரட்டியைப் பயன்படுத்திய பிறகே அந்த ஓநாய் மேலும் தூரத்திற்கு விலகிச் சென்றது. இந்தச் சம்பவத்தின் போது ஓநாய் உறுமுவதோ அல்லது தாக்கும் நோக்கத்திலோ செயல்படவில்லை என்றாலும், காட்டு விலங்கு என்பதால் அந்த நபர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டார். தான் வந்த வழியே திரும்பாது, நீண்ட தூரப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாப்பாக நெடுஞ்சாலையைச் சென்றடைந்தார்.

Texas man keeps walking while being followed by a wolf for 10 minutes at Yellowstone National Park.

The man, Ignazio Zanin, was seen casually turning around and spraying the wolf with bear spray.

"It was a wolf. A predator. I didn’t know for certain if it was safe or not,"… pic.twitter.com/LcKEzeOIrI

— Collin Rugg (@CollinRugg) August 26, 2026

“>

இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், அந்தப் பகுதியில் உள்ள சில இளம் ஓநாய்கள் மனிதர்களின் நடமாட்டத்திற்குப் பழகியிருப்பதால், ஆர்வத்தினால் இவ்வாறு பின்தொடர்ந்திருக்கலாம் எனக் தெரிவித்தனர். மேலும், அந்த இக்கட்டான சூழலில் பயந்து ஓடாமல் அமைதி காத்து, கரடி விரட்டியைச் சரியாகப் பயன்படுத்தித் தப்பித்த அந்த நபரின் சாதுரியத்தைப் பூங்காப் பாதுகாவலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.