அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், தனது மாணவர்களைப் போதையில் உறைந்துபோகச் செய்து, கொடூரமான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுத்திய அதிர்ச்சி வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அந்த ஆசிரியைக்கு, தற்போது அவரது கணவர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளார்.
பிரட்டனி ஃபோர்டின்பெர்ரி (33) என்ற அந்த முன்னாள் கணித ஆசிரியை, தம்மிடம் படிக்கும் குறைந்தபட்சம் ஆறு மாணவர்களுடன் பாலியல் ரீதியில் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 13 வயதுடைய சிறுவர்களுக்குக் கூட மதுபானங்கள் மற்றும் ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களைக் கொடுத்து அவர்களைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
Husband divorces wife after she was busted for allegedly r*ping 13-year-old students and giving them ‘magic mushrooms.’
Brittany Fortinberry, 33, an Indiana teacher, was previously slapped with 47 charges involving minors.
She blamed the alleged r*pes on weight loss.
In one… pic.twitter.com/FP1qepmpCc
— Collin Rugg (@CollinRugg) August 27, 2026
ஒரு குற்றச் சம்பவத்தின் போது, ‘ஸ்கிரீம்’ திரைப்படத்தில் வருவது போன்ற கொடூரமான முகமூடிகளைச் சிறுவர்களை அணியச் செய்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளார். சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம், ஆபத்தான பொருட்களை விநியோகித்தல் மற்றும் சிறார்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லுதல் உள்ளிட்ட 47 கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
போலீசார் இவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே இவரது கணவர் நிக்கோலஸ் ஃபோர்டின்பெர்ரி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது ஒரு வருடத்திற்கும் மேலான சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தத் தம்பதியினர் நீதிமன்றம் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பிரிந்துள்ளனர். வெளியான நீதிமன்ற ஆவணங்களின்படி, சொத்து மற்றும் உடைமைகள் கீழ்க்கண்டவாறு பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி பிரட்டனி ஃபோர்டின்பெர்ரிக்கு அவரது ஆடைகள், காலணிகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவரது முன்னாள் கணவர் நிக்கோலஸுக்கு 2022 மாடல் க்ளெஸ்லர் பசிபிகா மற்றும் டொயோட்டா 4ரன்னர் ஆகிய கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களது பொதுவான வீடு விற்கப்பட்டு, அதில் கிடைத்த பணத்தை இருவரும் சரிசமமாகப் பிரித்துக் கொண்டுள்ளனர்.
பிரட்டனி சிறையில் விசாரணைக்காகக் காத்திருக்கும் காலக்கட்டத்தில், அவர்களது குழந்தையின் முழு சட்டப்பூர்வ பாதுகாப்பும் தந்தை நிக்கோலஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆசிரியை குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தால், குழந்தையைத் திரும்பப் பெறும் உரிமை அவருக்கு உண்டு.
ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு இளம் மாணவர்களின் எதிர்காரணத்தையே கேள்விக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் அமெரிக்காவில் உள்ள பெற்றோர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டிய கல்விப் பணியில் இருந்த ஒருவர், இத்தகைய கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டது சமூகம் தாண்டி உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. கணவனும் கைவிட்டு, சட்டத்தின் கடுமையான பிடியில் சிக்கியுள்ள இந்த வழக்கில், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
