பிலாஸ்பூர் – கட்னி ரயில் பாதையில் உள்ள பன்வார்டாங்க் சுரங்கப்பாதைக்குள் இரயில் தண்டவாளத்தில் சிறுத்தை ஒன்று நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் என்ஜின் ஓட்டுநரின் சமயோசிதமான செயலால், சிறுத்தை மீது ரயில் மோதுவது தவிர்க்கப்பட்டு அதன் உயிர் தப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் கோங்சாரா – பன்வார்டாங்க் பிரிவில் நடந்துள்ளது. அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்த இந்தப் பகுதி வனவிலங்குகளின் நடமாட்டத்திற்குப் பெயர்பெற்றதாகும். வழக்கம் போல் இரயில் சென்றுகொண்டிருந்த போது, தண்டவாளத்தில் சிறுத்தை நடமாடுவதை லோகோ பைலட் கவனித்துள்ளார். உடனே அவர் ரயிலின் வேகத்தை வெகுவாகக் குறைத்து, சிறுத்தைக்குத் தேவையான அவகாசம் வழங்கி பாதுகாப்பான தூரத்தைப் பராமரித்துள்ளார்.
சுரங்கப்பாதைக்குள் தண்டவாளத்திற்கிடையே சிறுத்தை நடந்து செல்ல, பின்னால் ரயில் மெதுவான வேகத்தில் பின்தொடர்ந்து சென்ற காட்சிகளை என்ஜெனிலிருந்தவாறே ஓட்டுநர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். சில நிமிடங்கள் தண்டவாளத்திலேயே நடந்த அந்தச் சிறுத்தை, பின்னர் ரயில் பாதையைவிட்டு விலகி அருகிலுள்ள அடர்ந்த காட்டுக்குள் மறைந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
पेंड्रा
बिलासपुर-कटनी रेलमार्ग पर भनवारटंक टनल में एक तेंदुआ दिखाई दिया, जो पटरियों पर ट्रेन के आगे-आगे चल रहा था
तेंदुए को देख कर लोको पायलट ने ट्रेन की रफ़्तार धीमी कर दी, तेंदुआ तेज़ी से जंगल की ओर भाग निकला
गार्ड ने इस खूबसूरत तस्वीर को अपने मोबाइल कैमरे में क़ैद किया… pic.twitter.com/jNUWCRvjd2— Anshuman Sharma (@anshuman_sunona) August 27, 2026
அடர்ந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் ரயில் பாதைகளில் இதுபோன்று வனவிலங்குகள் குறுக்கிடுவது தொடர் கதையாகி வருகிறது. சிறுத்தைகள், யானைகள் போன்ற விலங்குகள் சில நேரங்களில் ரயில் பாதைகளுக்கு அருகில் வருவது வழக்கம். இது வனவிலங்குகளுக்கும் ரயில் போக்குவரத்திற்கும் ஒருசேர அச்சுறுத்தலாக அமைகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் ரோந்துப் பணிகளையும் தீவிர கண்காணிப்பையும் உடனடியாக அதிகரித்துள்ளனர். சுரங்கப்பாதையைக் கடந்து சென்ற சிறுத்தை மீண்டும் ரயில் பாதைக்கு அருகில் வருகிறதா என்பதை வனத்துறைக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான சந்திப்புகளைத் தவிர்க்கவும், வனவிலங்குகள் மற்றும் ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
