தமிழ் திரையுலகில் உச்சசத்திரமாக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் துணிவு. இப்படத்தின் வெற்றியை அடுத்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி டைரக்டில் உருவாகவுள்ள அஜித்-62 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையில் இத்திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சைத்ரா ரெட்டி முன்பே அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் இப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருவதால் சைத்ரா ரெட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.