உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார். இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 160 மொழிகளில் வெளியான நிலையில் ரூ. 18,534 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இதனால் உலக அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

முதலிடத்தில் அவதார் திரைப்படமும், இரண்டாம் இடத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற படமும் இருக்கிறது. இந்நிலையில் அவதார் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மார்ச் 28-ம் தேதி ஆப்பிள் டிவி மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட சில ஓடிடி தளங்களில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.