தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி  இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. தெலுங்கில் மட்டும் வாத்தி படம் 20 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வாத்தி திரைப்படம் வருகின்ற மார்ச் 17-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.