டெல்லியில் நீட் தேர்வு முறை கேட்டு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை எட்ட உள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சு கிட்டத்தட்ட 25 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து வருகிறார்.
இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சென்னையிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் என்று வெளியாகி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் காலை முதலே கலைகட்டி உள்ளது.
காலை முதல் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் பிரபலங்கள் என பலரும் ஆர்வத்துடன் படத்தை பார்த்து வரும் நிலையில் தளபதிக்காக ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு விஷயங்களை செய்கிறார்கள்.
அந்த வகையில் தளபதிக்காக சில ரசிகர்கள் முட்டி போட்டு நடந்து மண் சோறு சாப்பிட்ட நிலையில் இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் வடநாட்டில் இளைஞர்கள் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடும் நிலையில் தமிழ்நாட்டிலும் சிலர் போராடினார்கள் ஆனால் இங்கே விஜய் ரசிகர்கள் முட்டி போட்டு மண் சோறு சாப்பிடுகிறார்கள் கண்கொள்ளா காட்சி என்று பதிவிட்டுள்ளார்
வடநாட்டில் நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக இளையோர் போராட்டம். தமிழ்நாட்டில் சில இளம் சமூகத்தினரும் போராடினர்.
இங்கே…விஜய் ரசிகர்கள் முட்டிபோட்டு நடந்து.. மண்சோறு சாப்பிடும் கண்கொள்ளா காட்சி.
— Blue Sattai Maran (@tamiltalkies) July 23, 2026
